மகளை தாக்கிய தந்தைக்கு விளக்கமறியலில் - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

மகளை தாக்கிய தந்தைக்கு விளக்கமறியலில் - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்

எஸ்.எமத்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் தனது ஒன்பது (09) வயது மகளை அலுமினிய கம்பியால் தாக்கி காயப்படுத்திய தந்தையை மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் நேற்று (29..04.2020) மாலை உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு சகோதரர்கள் சன்டைபிடித்தபோது பிள்ளைகளின் தந்தை தனது ஒன்பது வயது மகளை அலுமினியம் கம்பியால் தாக்கியதில் சிறுமி தலையில் ஏற்பட்ட காயத்துடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மகளை தாக்கிய தந்தை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment