வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கி விசுறும் பணிகள் முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கி விசுறும் பணிகள் முன்னெடுப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று நீக்கி விசுறும் பணிகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரிடம் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் றெஜினோல்ட் விஜிதரன் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் தொற்று நீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இடம்பெற்றது.

இதன்போது, மீனவர்களுக்கும் மீன்களை உண்ணும் பொதுமக்களுக்கும் நோய்கள் தொற்றாத வகையில், துறைமுகத்தின் வளாகம், அலுவலகம், பாதுகாப்பு நிலையம், மீன்கள் சேகரிக்கும் நிலையம் உட்பட்ட இடங்களில் திரவம் விசுறப்பட்டது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்குச் சட்டத்தால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மீனவர்கள் அனுமதியுடன் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment