திடீரென மயங்கி விழுந்தவர் வைத்தியசாலையில் அனுமதி..! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

திடீரென மயங்கி விழுந்தவர் வைத்தியசாலையில் அனுமதி..!

திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் நேற்று (22.04.2020) மாலை திடீர் என மயங்கி விழுந்த நபர் ஒருவர் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

குறித்த நபர் இரண்டாம் குறுக்கு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அங்கிருந்தவர்களால் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினர் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் அந்நபரை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். மயக்கத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

No comments:

Post a Comment