தம்பகல்ல, கல்ஓயா தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (22) கல்ஓயா பூங்கா பகுதியை சுற்றிவளைக்கச் சென்ற இங்கினியாகலை வனஜீவராசிகள் குழுவினர் மீது, வேட்டைக்காரர்கள் குழுவினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதில் குறித்த வனஜீவராசிகள் அதிகாரி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இங்கினியாகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வரைக் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து 12 துளை கொண்ட துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இது தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment