எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி சந்தணமடு காட்டுப்பகுதியில் கஞ்சாத் தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன்களை வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, எட்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் கஞ்சாத் தோட்டம் மற்றும் கசிப்பு கொள்கலன் என்பன வெவ்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்டது.
இதில் சந்தணமடு காட்டுப் பகுதியிலிருந்து பதினாறு கஞ்சாச் செடிகள் வளர்த்து வந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கசிப்பு தயாரிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கை மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்ட கசிப்பு 210 லீற்றர் கொள்கலன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஈடுபட்டு வந்த நபர்கள் தப்பியோடியுள்ளதுடன், இவர்கள் தொடர்பான விசாரணைகளை இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment