கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பினால் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு முகாமிலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலருணவுப் பொருட்கள் இன்று கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக உலருணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பினால் முகாமிலுள்ள இராணுவத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பின் ஆலோசகரும், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ரீ.எம்.றிஸ்வி, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வைத்தியர் எம்.ஐ.எம்.இல்ஹாம், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சி.எம்.நியாஸ், உலமா சபையின் கல்குடாக் கிளையின் செயலாளர் மௌலவி எம்.இஸ்ஸத், அதன் பொருளாலர் எமளலவி ஏ.இல்யாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்குடாக் கிளை, கல்குடா வைத்தியர்கள், பிரதேச செயலகங்கள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், ஓட்டமாவடி வர்த்தக சங்கங்கம் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களினால் இணைந்து உருவாக்கப்பட்டு இயங்கி வருவதே கல்குடா கொவிட்-19 டாஸ்க் போர்ஸ் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment