(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருக்கிறார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் உச்சத்தைத் தீர்மானிக்கும் வாரங்களாக எதிர்வரும் இரு வாரங்களும் அமையும் என மருத்துவ நிபுணர்கள் எதிர்வு கூறியிருக்கும் நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் தனது ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது ஒரே நாட்டவர் என்ற வகையில் தற்போது நாம் கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள புதிய சவாலொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்.
இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத்தலைவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் பாராளுமன்றமும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்.
No comments:
Post a Comment