(இராஐதுரை ஹஷான்)
ஊரடங்குச் சட்டம் சட்டத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளமை சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கருத்துரைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் உலகளாவிய மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 74 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன. நிவாரணம் கிடைக்கப் பெறாதவர்கள் கிராம சேவகர் ஊடாக இந்நிதியை பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் பொதுச் சட்டத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்படவில்லை. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டுள்ளதாவது ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.
அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்படுகின்றார். என எதிர்த்தரப்பினர் குறிப்பிடுவது தவறான கருத்தாகும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பிட்டமை அனைத்தும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே காணப்பட்டது. பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியோ, அரசாங்கமோ தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டே தீர்மானங்களை எடுக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment