பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு இன்று காலை லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிரதமர் போரிஸ் மற்றும் சைமண்ட்ஸ் என்ஹெச்எஸ் மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் திங்களன்று பணிக்குத் திரும்பினார்.
சைமண்ட்ஸ் கர்ப்பமாக இருப்பதாகவும், அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் பெப்ரவரி இறுதியில் இந்த ஜோடி அறிவித்தது நினைவுக் கூரத்தக்கது.
ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
இந்நிலையில் 55 வயதான பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே செய்துகொண்ட திருமணங்கள் மூலம் 6 பிள்ளைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment