கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 8, 2020

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர் கைது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரினால்  நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் லூசா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்து அதிக விலையில் விற்பனை செய்து வரும் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதற்கமைய தலவாக்கலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கசிப்பு தயாரிப்பிற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் 37,750 மில்லி லீற்றர் கசிப்பையும் தலவாக்கலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர்)

No comments:

Post a Comment