அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

அரசாங்கத்தின் உத்தரவுகளை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மீறியவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொலைபேசியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

நான் உங்களை கொன்று புதைத்து விடுவேன் என அவர் எச்சரித்துள்ளார். நிலைமை மோசமடைகின்றது இதன் காரணமாக நான் உங்களுக்கு நிலைமை எவ்வளவு பாரதூரமானது என்பதை தெரிவிக்கின்றேன் நீங்கள் அதனை செவிமடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிரச்சினைகள் உருவானால், அவர்கள் மோதலில் ஈடுபட்டு உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றால் சுட்டுத்தள்ளுங்கள் என்பதே காவல்துறையினருக்கான எனது செய்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் உங்களை புதைத்து விடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிலிப்பைன்சின் தலைமை காவல்துறை அதிகாரி எவரும் சுடப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளதுடன் இந்த விடயத்தில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார். 

பிலிப்பைன்சில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment