மூவாயிரம் ரூபாய் பணமும், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

மூவாயிரம் ரூபாய் பணமும், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் வழங்கி வைப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் வழிகாட்டலில் சமுர்த்தி பெறுவதற்கு காத்திருக்கும் பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாத உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில், ஓட்டமாவடி சமுர்த்தித் திணைக்களத்தினால் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவின் கிராம சேவகர் பிரிவுவிலுள்ள சமுர்த்தி பெறுவதற்கு காத்திருக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாத நிதியுதவி மற்றும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேகவர்கள் சகிதம் கலந்து கொண்டு நிதி மற்றும் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர்.

இதன்போது, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், சமுர்த்தி உதவி பெறக்காத்திருப்புப் பட்டியலிலுள்ளவர்கள் மற்றும் இதுவரை எவ்விதமான கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரூபாய் பணமும், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்களும் வழங்கி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment