கொரோனா வைரசினை பயன்படுத்தி சில உலக நாடுகள் அடக்கு முறைகளில் ஈடுபடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிஸ், கொரோனா வைரசுடன் தொடர்புபடாத காரணங்களிற்காக ஒடுக்குமுறை நடைமுறைகளை சில நாடுகள் பின்பற்றக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி மனித உரிமை நெருக்கடியாக மாறும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகினை தற்போது ஆட்கொண்டுள்ள சுகாதார சமூக பொருளாதார நெருக்கடிகளிற்கான தீர்வுகளை முன்வைக்கும்போது மனித உரிமைகள் எவ்வாறு அவற்றிற்கு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்த ஐநாவின் அறிக்கையை வெளியிட்டு வைத்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் சில சமூகங்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுவதை காண்கின்றோம் என தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள், பலவீனமான சமூகங்களை இலக்கு வைப்பது, சுகாதார நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரித்து வரும் இன தேசிய வாதம், ஜனரஞ்சக போக்கு, ஏதேச்சதிகாரம், சில சமூகங்களில் மனித உரிமைகள் பின்தள்ளப்படுதல் போன்றவற்றின் பின்னணியில் இந்த நெருக்கடி, தொற்று நோயுடன் தொடர்பில்லா நோக்கங்களிற்காக அடக்குமுறை நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாக்குப் போக்கை வழங்குகின்றது என ஐ.நா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment