கொவிட் 19 ஒழிப்புக்கு டொயோட்டா லங்காவினால் 2 பஸ்கள் அன்பளிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

கொவிட் 19 ஒழிப்புக்கு டொயோட்டா லங்காவினால் 2 பஸ்கள் அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக டொயோட்டா லங்கா தனியார் நிறுவனம் 20 மில்லியன் பெறுமதியான இரண்டு பஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது.

இரண்டு பஸ் வண்டிகளும் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து டொயோட்டா லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இலங்கை மருந்துப்பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார மற்றும் அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய ஆகியோரிடம் கொவிட் ஆராய்ச்சி மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு பஸ் வண்டிகளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment