ஹிங்குராங்கொடையில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஹிங்குராங்கொடை, ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (30) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டிலுள்ள மரணித்த பெண், நீரிறைக்கும் மோட்டாருக்கு மின்சாரம் வழங்குவதற்காக வயரொன்றை கொழுவியபோது, மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண், அவரது கணவரால் ஹிங்குராங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அதேயிடத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment