எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் அமர்த்தும் பணிகள் மற்றும் சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை குடும்பத்துடன் இணைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
அந்த வகையில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த வாழைச்சேனையில் ஐந்து நபரும், மயிலங்கரச்சையில் ஆறு பேரும், மஜ்மா நகரில் நான்கு பேருமாக பதினைந்து பேர் சுய தனிமைப்படுத்தலில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களது இல்லங்களுக்கு சென்று இவர்களது சுய தனிமைப்படுத்தல் தொடர்பிலான கடிதங்களை வீடுகளில் ஒட்டியுள்ளனர்.
அத்தோடு கடந்த இரு வாரங்களுக்கு முதல் குவைத், கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பதின்மூன்று பேர் சுய தனிமைப்படுத்தலில் இருந்து கொரோனா தொற்று இல்லை என்ற நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களது இல்லங்களுக்கு சென்று இவர்களது தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து விட்டது என்று மருத்துவ சான்றிதழ் வழங்கியதுடன், காய்ச்சல் தடுமல் ஏதும் ஏற்பட்டால் தொலைபேசி மூலமாக எங்களை தொடர்பு கொள்ளுமாறும் அல்லது வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
சுய தனிமைப்படுத்தல் மூலம் பதினான்கு நாட்கள் வீட்டில் இருந்த பதின்மூன்று பேருக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment