யாழ். அரியாலை ஆலயத்திற்கு சென்றவர்கள் உடனடியாக அடையாளப்படுத்தவும் - வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

யாழ். அரியாலை ஆலயத்திற்கு சென்றவர்கள் உடனடியாக அடையாளப்படுத்தவும் - வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்

கொரோனா தொற்று சர்ச்சைக்குரிய யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்கு செல்லாது மறைந்திருப்பவர்கள் தங்களை உடனடியாக அடையாளப்படுத்தவும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார். 

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலையில் தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றோம். 

யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்த வரையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம். அந்த அடிப்படையில் தாவடியில் உள்ள ஒரு பகுதியினருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அரியாலைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன என்றார்.

No comments:

Post a Comment