கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி மாலை வேளைகளில் கூடி நிற்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் தொடர்மாடிகளில் வாழ்வோர் சட்டத்தையும் மீறி வீதிகளில் கூடி நிற்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனவே இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பொலிஸார் இன்று முதல் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேற்று விளக்கமளித்தபோதே பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,034 பேர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் 11 அயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகொடஉயன பிரதேசத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞர்கள் போதைப் பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
டெலிகொம் நிறுவனம், ஏனைய தொலைபேசி நிறுவனங்கள், கால்நடை வைத்தியர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் தமது உபகரணங்களை புதுப்பிக்கும் செயற்பாடுகளுக்காக செல்வோருக்கு ஊரடங்குச் சட்டத்தின்போதும் ஆள் அடையாளத்தை உறுதிபடுத்தும் பட்சத்தில் வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment