உத்தரவை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு - கைதானோருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

உத்தரவை மீறிச் சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு - கைதானோருக்கு விளக்கமறியல்

மொரட்டுவ, எகொடஉயன, புதிய பாலம் அருகே வீதித் தடையில் உத்தரவை மீறிச் சென்ற கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

காயமடையாத சந்தேகநபரை நேற்று (03) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இம்மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு சந்தேகநபர்கள் தொடர்பில் நேற்றையதினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய, அவர்கள் இருவருக்கும் இம்மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றைய சந்தேக நபர் தொடர்பில் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய, அவருக்கு இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின்போது பொலிஸார் 3 சந்தர்ப்பங்களில வழங்கிய சமிக்ஞையையும் மீறி கார் ஒன்றில் இவர்கள் பயணித்தபோது கடமையிலிருந்த பொலிசார் குறித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment