எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கடிதம் தேசிய ரீதியில் ஒருமித்த கருத்தை உருவாக்க உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது - முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கடிதம் தேசிய ரீதியில் ஒருமித்த கருத்தை உருவாக்க உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது - முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா) 

எதிர்க்கட்சிகளால் வழங்கப்பட்டுள்ள கூட்டுக் கடிதம், தேசிய ரீதியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உகந்த சூழலை அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.

கொவிட்-19 கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சிகளால் வழங்கப்பட்டுள்ள கூட்டுக் கடிதம், தேசிய ரீதியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உகந்த சூழலை அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

இது மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை உற்பத்தி, நிர்மாணம் போன்ற பொருளாதார மீட்சிக்கு அத்தியாவசியமான துறைகளை மீண்டும் திறக்க உதவியாகவும் அமையும். 

அதேவேளை கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் நாட்டு மக்களினதும் முன்னரங்ப் பணியாளர்களினதும் நம்பிக்கையை நிலைநிறுத்துவது அவசியமாகும். 

அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் தலைவர்களுடனும் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபடுவது அவசியமாகும். ஆனால் அது இப்போது செயற்திறன் மிக்க வகையில் நடைபெறுவதைக் காணமுடியவில்லை.

No comments:

Post a Comment