தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு

லிந்துலை, அகரகந்த பகுதி தெருவோரத்தில் சிசுவொன்றின் சடலம் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் அகரகந்த தோட்டப் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் இவ்வாறு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் முழுமையாக சிதைவடைந்திருந்ததால் அச்சிசுவின் உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறை மாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிசுவின் சடலம் குறித்து நீதவானின் ஸ்தல விசாரணைகள் முடிவடைந்த பின்னர் - மேலதிக விசாரணைக்காகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸார் ஊடாக சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)

No comments:

Post a Comment