நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உதவும் வகையில், சுகாதார ஆடைகளும் மருத்துவ உபகரணங்களும் சீனக் குடியரசினால், இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்றையதினம் (24) குறித்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரால் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலிருந்து விடுபடுவதற்கான கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு சீனக் குடியரசினால் பாதுகாப்பு அங்கிகள், முகக் கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு கண்ணாடிகள், தனிப்பட்ட வெப்பநிலை அளவிடும் கருவிகள் உட்பட சுகாதார ஆடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 3 தினங்களில் வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் 60 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment