கத்தோலிக்கர்களுக்கும், பௌத்தர்களுக்கு, இந்துக்களுக்கும் அவர்களது மத அனுஷ்டானங்களை விட்டுக் கொடுக்க முடியுமேயானால், இஸ்லாமியர்களுக்கும் முடியுமாக வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவர்களும் விட்டுக் கொடுப்பதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நோயாளிகளை அனுமதிக்கும் ஆஸ்பத்திரிகளின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான கட்டில்கள் தயாரிக்கும் நிலையத்தை பார்வையிடுவதற்காக நீரகொழும்புக்கு அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று வருகை தந்திருந்தபதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டு (2) இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டது தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச.
மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நாட்டில் உள்ள எவராயினும் அது சிங்கள பௌத்தர்களாக இருக்கட்டும், கத்தோலிக்கர்களாக இருக்கட்டும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் எந்த மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தாலும் அந்த ஆகம விதிகளின்படி இந்த கொரோனா வைரஸ் மூலம் இறப்பவர்களின் இறுதிக் கிரிகைகளை தீர்மானிக்க முடியாது.
இந்த நோய்த் தொற்று தொடர்பாக நன்கு அறிந்த விசேட வைத்திய நிபுணர்கள் சுகாதார பிரிவு அதிகாரிகள் தான் அதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.
நீர்கொழும்பு நிருபர்
No comments:
Post a Comment