பொருள் கொள்வனவில் மக்களின் வருகை குறைவு - கொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

பொருள் கொள்வனவில் மக்களின் வருகை குறைவு - கொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த வேளையில், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊடரங்குச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்பட்டது.

அந்த வகையில், இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் ஊடரங்குச்சட்டம் நீக்கப்பட்டு பின்னர் பஇன்றைய தினமே பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கல்குடாப்பிரதேசத்தில் மக்கள் பொருட்களைக் கொள்வனவில் ஈடுபட்டனர்.
ஆனால், பொது மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. பெரும்பாலான வியாபார நிலையங்கள் மூடிக் காணப்பட்டதுடன், வியாபார நிலையங்களில் பொது மக்கள் பொருட்கொள்வனவு செய்வதில் ஆர்வங்குறைவாக காணப்பட்டது.

மக்களின் பாதுகாப்புக்கருதி வாழைச்சேனைப்பிரதேச சபையின் ஏற்பாட்டில் சந்திவெளி பொது மைதானம், கிரான் பொது மைதானம், செம்மண்ணோடை சாட்டோ மைதானம், வாழைச்சேனை பொது மைதானம், பேத்தாளை பொது மைதானம் ஆகியவற்றில் வியாபாரம் நடைபெற்றது.
அத்தோடு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி அமீர் அலி மைதானம், மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை மைதானம், காவத்தமுனை அல்-அமீன் பாடசாலை மைதானம், வாகனேரி கோகுலம் வித்தியாலய மைதானம் ஆகிய இடங்களில் வியாபாரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், குறித்த வியாபாரம் நடைபெறும் இடங்களில் மக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டதோடு, வங்கிகளிலும் மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தாக்கம் சம்பந்தமான அச்சநிலை அதிகரித்து வருவதன் காரணமாகவே மக்கள் வியாபார நிலையங்களில் பொருட்கள்கொள்வனவில் ஈடுபடுவது குறைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விற்பனை நிலையங்கள், வங்கிகள் மற்றும் மருந்தகங்களில் பொது மக்கள் சுகாதாரப்பகுதியினரால் விடுக்கப்பட்டுள்ள விதி முறைகளின்படி ஒரு மீற்றர் இடைவெளியைப் பின்பற்றி வரிசைக் கிரமமாக தங்களின் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.

இதன் காரணமாக, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் நெரிசலினைக் குறைத்து பொது மக்களின் பாதுகாப்புக்கருதி கடமைகளில் ஈடுபட்டு வருவதைக்காணக் கூடியதாக இருந்தது.

No comments:

Post a Comment