ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? - திணறும் அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகளா? - திணறும் அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 59 ஆயிரத்து 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. 

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அந்நாட்டில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. 

அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment