“தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்” - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

“தேர்தலுக்காக நாடு திறக்கப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பும் ஜனாதிபதியையே சாரும்”

தேர்தலுக்காக இந்த நாடு திறந்து விடப்பட்டு மரணங்கள் சம்பவிக்குமானால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் பேருந்தில் அழைத்துவரப்பட்டு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் வேறுஎந்த இடங்களிலும் இராணுவ முகாம் இல்லையா என்ற கேள்வி இதனால் எழுகின்றது.

அத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் பாரியளவிலான இராணுவத்தளங்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றது என்பதனை இந்த நடவடிக்கை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகின்றது இந்நிலையில் தேர்தல் குறித்து அரசாங்கம் பேசிவருகின்றது. மக்களை பொறுத்தவரை தேர்தல் என்பது அவசியமானதொன்றல்ல.

எனேவ தேர்தலுக்காக நாடு திறந்து விடப்பட்டு அதன் காரணமாக மரணங்கள் சம்பவிக்குமானால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இராணுவத்தினரும் பொறுப்பாகும்.” என கூறினார்.

No comments:

Post a Comment