பொதுமக்களின் உயிரை பணயம் வைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவது கட்டாயமா? தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கடிதம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

பொதுமக்களின் உயிரை பணயம் வைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவது கட்டாயமா? தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கடிதம்



பொதுமக்களின் உயிரை பணயம் வைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவது கட்டாயமா? என தேர்தல் ஆணையாளரிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமாகிய இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறிவிக்கப்படுள்ள தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Covid-19 எனப்படும் இந்த கொரோனா தொற்றில் இருந்து நாடு எப்போது முற்றாக விடுபடும் என்பதை கணிக்கும் ஆற்றல் யாருக்கும் இருப்பதாக நான் அறியவில்லை.அரசின் சில உண்மைக்கு புறம்பான தகவல்களை கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது தேர்தலை நடாத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்காக காணப்படும் இச்சந்தர்பத்தில் உங்களால் ஜூன் இருபதாம் திகதி தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த தொற்றை கட்டுபடுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தேர்தல் ஒன்று நடைபெற்றால் இதுவரை நாம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது உட்பட இந்த தொற்றை கட்டுபடுத்த மேற்கொண்ட சகல நடவடிக்கைகளும் தோல்வியடையும்.

நாட்டு மக்களின் உயிரை பணயம் வைத்து தேர்தல் நடாத்துவது தேவையற்றது. அவ்வாறு இந்த அபாயகரமான சூழ்நிலையில் தேர்தல் ஒன்று நடாத்தப்படின் எனது பின்வரும் சந்தேகங்களுக்கு உங்களிடம் இருந்து தகுந்த ஆலோசனையை எதிர்பார்கிறேன்.

1-தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்களின் போஸ்டர், பேனர் போன்றவற்றை காட்சிப்படுத்த முடியுமா?

2-வீடு வீடாக சென்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை தெளிவுபடுத்த முடியுமா?

3-தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடாத்த முடியுமா?

4-இந்த வைரஸ் தொற்றால் அவ்வாறு செய்ய முடியாது எனின் புதிய தேர்தல் பிரச்சார முறை ஏதும் உங்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?

பொதுமக்களின் உயிரை பணயம் வைத்து தேர்தல் ஒன்றை நடாத்துவது கட்டாயமா?தேர்தலை வெற்றி கொண்டு நாட்டை நிர்வாகம் செய்ய நாடு மட்டும் இருந்தால் போதாது நாட்டில் மக்களும் இருக்க வேண்டும் என்பதே எனது அபிப்ராயம்
என அந்த கடித்ததில் குறுப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment