இலங்கையில் கொரோனா வைரஸினால் நான்காவது மரணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

இலங்கையில் கொரோனா வைரஸினால் நான்காவது மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.

இன்று (02) இரவு 9.30 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த நபர் நியூமோனியா காய்ச்சல் நிலை உக்கிரமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றின் காரணமான மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது. 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் கடந்த திங்கட்கிழமை (30) மொஹமட் ஜமால் எனும் நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார். இவர் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (01) 3ஆவது மரணம் பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஒருவர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார். இவரும் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை மார்ச் 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் 4 பேரும் என இலங்கையர் 07 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment