உலகளாவிய நோய் தொற்றினை பயன்படுத்தி இலங்கை கருத்து சுதந்திரத்தினை கட்டுப்படுத்துகின்றது - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

உலகளாவிய நோய் தொற்றினை பயன்படுத்தி இலங்கை கருத்து சுதந்திரத்தினை கட்டுப்படுத்துகின்றது - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

உலகளாவிய நோய் தொற்றினை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரத்தினை கட்டுப்படுத்துகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளை விமர்சிப்பவர்களை கைது செய்யுமாறு இலங்கையின் காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார், வைரஸ் குறித்த போலியான தகவல்களை பரப்புபவர்களை கைது செய்யுமாறும அவர் உத்தரவிட்டுள்ளார். 

உலகளாவிய நோய் தொற்று என்பது அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது அவர்கள் உரிய சுகாதார நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாக்க முயல்கின்றனர். 

ஆனால் விமர்சனங்கள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, சில விமர்சனங்கள் நீதியானவையாக, நிலைமையை மேலும் தீவிரப்படுத்துபவையாக காணப்பட்டாலும், விமர்சனங்களால் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. 

முழுமையான தணிக்கையும், கருத்துக்கள் பேச்சுக்களுக்காக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலும் சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கீழ் இலங்கைக்குள்ள கடப்பாடுகளை மீறும் செயல் என்பதுடன் அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துபவையாக மாறக்கூடும். 

தகவல்களை மறைப்பதன் மூலம் தணிக்கை செய்வதன் மூலம் அதிகாரிகளுக்கு தங்களின் நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் தெரியவருவது தடுக்கப்படும், அவர்கள் அவற்றை அறிய முடியாத நிலை காணப்படும். 

ஊரடங்கு உத்தரவின் போதும் முடக்கல்களின் போதும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கான உதவிகள் அவசியம். அவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை காணப்பட வேண்டும். 

இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கு இலங்கை ஜனாதிபதி இலங்கையின் இராணுவ தளபதியை நியமித்துள்ளதன் காரணமாக இலங்கையர்கள் மத்தியில் தங்கள் உரிமைகள் குறித்து காணப்படும் கரிசனைகள் மதிக்கப்பட வேண்டும். 

கொவிட் 19 பரவுவதை தடுப்பதற்கான இலங்கையின் தேசிய நடவடிக்கை நிலையத்தின் தலைவராக யுத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவ தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

மிக நீண்ட காலமாக பாதுகாப்பு படையினரின் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்ட தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் தங்களுடைய அரசியல் சிவில் உரிமைகள் மதிக்கப்படப்போவதில்லை என கரிசனை கொண்டிருக்ககூடும். 

வைரஸ் குறித்தும், சேவைகள், சேவைகளை ஏற்படும் குழப்பங்கள் உட்பட இது தொடர்பான அனைத்து விடயங்கள் குறித்தும் துல்லியமான உடனடி தகவல்களை அனைவரும் பெறுவதை உறுதி செய்வதே உரிமைகளை மதிக்கும் நடவடிக்கையாக விளங்கும். 

உலகளாவிய நோய் தொற்றின் போது கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்ய தவறுவது அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கையின்மையை உருவாக்கலாம்.

வீரகேசரி

No comments:

Post a Comment