நாட்டிலுள்ள 217 கைத்தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

நாட்டிலுள்ள 217 கைத்தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன

(இராஐதுரை ஹஷான்) 

நாடு தழுவிய ரீதியில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட 217 கைத்தொழில்சாலைகளின் சேவை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 

சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முழுமையான கண்காணிப்புக்கு அமையவே இந்த கைத்தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய 217 கைத்தொழில்சாலைகளில் 30,269 சேவையாளர்கள் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தொழிற்சாலைகளின் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகம் செயற்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தொழிற்சாலையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுகளை பின்பற்றாத தொழிற்சாலைகளுகலகு எதிரான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment