எஸ்.எம்.எம்.முர்ஷித்
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோணா தொற்று நோயிலிருந்து இலங்கை உட்பட உலக நாட்டு மக்களை விடுவிக்க வேண்டி வாழைச்சேனை முறாவோடை சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட யாகம் மற்றும் அபிசேக பூசைகள் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
கொரோணா தொற்றினால் உலக நாடுகளில் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் இலங்கையிலும் கொரோணா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கொரோணா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வாழைச்சேனை முறாவோடை சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தனவந்திரி யாகம், அபிசேக பூசை நடாத்தப்பட்டதுடன், தீபமேற்றி இறைவழிபாடும் இடம்பெற்றது.
வைத்தியர்களுக்கெல்லாம் வைத்தியராக இருந்து அருள்பாலிக்கும் சிவனின் மற்றுமொரு வடிவமான தனவந்திரிப் பெருமானை நோயிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டி தனவந்திரி யாகம் மற்றும் அபிசேக பூசை நடாத்தப்பட்டது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவப்பிரம்மஸ்ரீ கே.ஜே.சந்திரசர்மா குருக்கள் மற்றும் மஞ்சந்தொடுவாய் சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சாதகாசிரியர் சிவஸ்ரீ.சி.குகநாத குருக்கள் ஆகியோர் தலைமையில் விசேட தனவந்திரி யாக பூசை இடம்பெற்றது.
குறித்த விசேட பூசை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் கலந்து கொண்டதுடன், உலகையே ஆட்டிப்படைக்கு கொரோணா தொற்று நோயிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டி தீபமேற்றி இறைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment