கொவிட் 19 ஒழிப்பு திட்ட நிதி, உபகரணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

கொவிட் 19 ஒழிப்பு திட்ட நிதி, உபகரணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார் பிரதமர்

(இராஜதுரை ஹஷான்) 

கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக சீன அரசாங்கம் மற்றும் நாட்டின் உயர் நிலை நிறுவனங்கள் வழங்கிய நிதி மற்றும் சுகாதார உபகரணங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இன்று புதன்கிழமை கையளித்தார். 

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக பென்டேரா நிறுவனம் 8 மில்லியன் ரூபா பெறுமதியான சுகாதார உபகரணத்தையும், அக்பர் பிரதர்ஸ் தனியார் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவையும், மேடர் லாஜிகள் கார்பரேஷன் ஒப் சைனா நிறுவனம் 1 இலட்சம் பாதுகாப்பு முகக் கவசம், 50 ஆயிரம் பாதுகாப்பு கையுறைகளையும், நவெஸ்டா நிறுவனம் சுகாதார சேவையாளர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 100 உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நன்கொடைகள் மற்றும் சுகாதார சேவைக்கான உபகரணங்களை பிரதமர் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment