கொவிட்-19 அச்சுறுத்தலை தடுக்க தொடர்ச்சியான ஊரடங்கு பிறப்பிக்கட்டுள்ளது. இதன் காரணமாக மிகவும் வறிய, அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற பல்லாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இவ்வாறாக பாதிக்கப்பட்ட 2650 நலிந்த குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் சிறிலங்கா, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் சிறிலங்கா மினரெட் பங்காளர் அமைப்புகளுடன் இணைந்து உலர் உணவுப் பொதிகளை உடனடியாக வினியோகம் செய்துள்ளது.
பிரதேச செயலகங்கள், பள்ளிவாசல்கள், பன்சல, கிறித்தவ ஆலயங்களின் ஒத்துழைப்புடன் 2809 உலர் உணவுப் பொதிகளை பொதியிடவும், பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு உடனுக்குடன் வினியோகம் செய்யும் பணி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, புத்தளம், திருகோணமலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் என்பவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இவ் உலர் உணவுப் பொதி வினியோகத்தின் மூலம் பயன்பெற்றுள்ளன.
ஆகவும் மோசமாகப் பாதிக்கட்ட வறிய குடும்பங்கள் உலர் உணவுப் பொதிகளை பெற்றுக் கொண்டதை மேற்படி 3 அமைப்புகளின் ஊழியர்களும் தொண்டர்களும் உறுதி செய்தனர்.
கொவிட்-19 வைரஸ் இன் தாக்கம் நமது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைவரையும் நெருக்கடிக்குள் தள்ளியும் கிலி கொள்ளச் செய்தும் இருக்கும் நிலையில், முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனம் சிறிலங்கா முஸ்லிம் கவுண்சில் அமைப்பின் ஒத்துழைப்புடன் மனிதநேய நிவாரணப் பணியில் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தனது பங்காளர் அமைப்புகளான சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில், சிறிலங்கா மினாரெட் என்பவற்றுடன் இணைந்து முஸ்லிம் எய்ட் சிறிலங்கா உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வதியும் நன்கொடையாளர்கள் மற்றும் மனிதநேய அமைப்புகளிடமிருந்து நன்கொடையினைப் பெற முடிந்தது.
அவசரகால நிலைமை மற்றும் ஊடரங்கு உத்தரவின் கீழ் பாதிக்கப்பட்ட ஊர்கள் முற்றாக முடக்கப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து உடனடியாகவே முஸ்லிம் எய்ட் செயலில் இறங்கியது.
ஆபத்தான கொரனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்குடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த முறையில் சுகாதார சேவைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா அரசினால் உடனடியாகவே நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற, அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர்களின் குடும்பங்கள் இந்ந நெருக்கடி நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக உலர் உணவு உதவி தேவைப்பட்டது.
மேற்படி மனித நேய நிவாரணப் பணிகளை எச்சரிக்கையுடனும் செவ்வனேயும் மேற்கொள்வதற்கு பூரண ஒத்துழைப்பு மற்றும் நெறிப்படுத்தல்களை வழங்கிய அரச பொதுப்பணி ஊழியர்களுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் முஸ்லிம் எய்ட் தனது மற்றும் தனது பங்காளர் அமைப்புகளின் நன்றியினையும் கடப்பாட்டினையும் தெரிவித்துக் கொள்கின்றது.
தொடர்ச்சியாக இலங்கைத் தீவில் அவசரகால நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற மேலும் பல குடும்பங்களுக்கு உதவும் நோக்குடன் முஸ்லிம் எய்ட் தனது மனித நேயப் பணியினை விரிவுபடுத்தவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment