இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த ஐந்தாவது நபரின் இறுதிக்கிரியை இன்று (04) பிற்பகல் இடம்பெற்றது.
திம்புலாகல, விஜயபாபுர மயானத்தில் குறித்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதன்போது மரணமடைந்தவரின் சடலம் நெருங்கிய உறவினர்கள் இருவருக்கு மட்டும் காண்பிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவர், இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் முகாமில் வைத்து அடையாளம் காணப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் திகதி வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வேறு நோய் நிலைமைகள் எதுவும் இல்லாத குறித்த நபர், கொரோனா வைரஸ் தொற்றால் மோசமடைந்த நிமோனியா நிலைமையை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் 26 ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையிலேயே இன்று அதிகாலை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்தே அவரது சடலம் திம்புலாகல, விஜயபாபுர மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment