ஊரடங்கை மீறி கைதானோர் 10,000 ஐ தாண்டியது - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

ஊரடங்கை மீறி கைதானோர் 10,000 ஐ தாண்டியது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நேற்று (02) காலை 6.00 மணி முதல் இன்று (03) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 1,264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இக்காலப்பகுதியில் 325 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 10,730 பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 2,657 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment