நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கிழக்கு மாகாண ஆளுனர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கிழக்கு மாகாண ஆளுனர்

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளும் அனைத்து வேலைத் திட்டங்களிலும் நாட்டின் பிரஜைகள் யாவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று (13) அவர் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வரும் இலங்கை பிரஜைகளை மிகவும் கருணையுடன் ஏற்றுக்கொள்வதோடு இச்செயற்பாடுகளில் உங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்குவது மிகப்பிரதானமாகும் என்றும் அவ்வாறில்லை எனில், உலகில் ஏனைய நாடுகள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு துன்புறும் நிலைக்கு எமது நாட்டு மக்களும் முகங்கொடுக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வைரசினை கட்டுப்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சு பாரிய அளவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே அதனை பின்பற்றி, எது நாட்டிற்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள எச்சரிக்கை நிலையினை அனைவரும் தெரிந்து கொண்டு அனைத்து பிரஜைகளும் இந்த வேளையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் மேற்கொள்ளப்படும் பணிகளை நாட்டின் நலனுக்காக தேசிய பணியென நினைத்து பொதுமக்கள் நிறைவேற்றுவார்களென தான் நம்புவதாகவும், நாங்கள் அனைவரும் இலங்கையின் பற்று மிக்க பிரஜையாக, இந்தப் பேரழிவிலிருந்து தேசத்தினை தற்காத்துக் கொள்வதில் ஒன்றாக இணைந்து செயற்பட உறுதிபூண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம்.எஸ். அப்துல் ஹலீம்

No comments:

Post a Comment