சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பை பாதுகாக்க 19 ஆவது திருத்தத்தை பாதுகாப்பது அவசியம் - அநுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பை பாதுகாக்க 19 ஆவது திருத்தத்தை பாதுகாப்பது அவசியம் - அநுரகுமார திஸாநாயக்க

சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் 19 ஆவது திருத்தச் சட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

நீதியரசர்களை நியமிக்க ஜனாதிபதிக்கிருந்த எதேச்சதிகாரம் நீக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார். 

கொகுந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, பிரதமருக்கு இடையில் சிக்கல்கள் ஏற்படும் சில சரத்துகள் உள்ளன. 

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வரை நீதியரசர்கள் நியமிப்பது அரசியலமைப்புச் சபைதான். அந்த நடைமுறையைதான் தற்போது நாம் பின்பற்றி வருகின்றோம்.

ஜனாதிபதிக்கு பணிபுரிய விடாது பிரதமர் அதிகாரத்தை கைப்பற்ற முற்படுவதாக மக்கள் எண்ணுகின்றனர். 19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிதான் நீதியரசர்களை நியமித்திருந்தார். இதனால் இங்கு பல பிரச்சினைகள் இருந்தன. 

தற்போது அரசியலமைப்பு சபைக்கு அதிகாரம் காணப்படுவதால் நீதியரசரை நீக்க முடியாது. பாராளுமன்றில் கொண்டுவரப்படும் யோசனையொன்றின் மூலம் மாத்திரமே நீதியரசரை நீக்க முடியும்.

ஆகவே, சுயாதீனமான நீதிகட்டமைப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் 19 ஆவது திருத்தச் சட்டத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment