இரு வகையான மருந்துகளை விற்கத் தடை வித்தது தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

இரு வகையான மருந்துகளை விற்கத் தடை வித்தது தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை

(எம்.மனோசித்ரா) 

விசேட மருத்துவ நிபுணர்களினால் வழங்கப்பட்ட மருந்துச்சிட்டு இன்றி குளோரோகுயின் (Chioroquine) மற்றும் கைரொக்சிகுளொரோகுயின் (Hydroxychioroquine) என்ற மருந்துகளை விற்பனை செய்ய வேண்டாம்.

இதனை தடைவித்து அனைத்து சில்லறை மருந்து விற்பனையாளர்களுக்கும் தேசிய ஒளடத ஒழுங்குமுறை ஆணையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த அறிவித்தலை மீறி மேற்கூறிய மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக 2015-5 ஆம் இலக்க தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் 131 ஆம் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

எனவே இவ்வாறு மருந்துகளை விற்பனை செய்பவர்கள் இனங்காணப்பட்டால் அவர்கள் தண்டனைக்குட்டுபடுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment