இந்தியாவில் சிக்கியிருந்த அனைத்து பௌத்த யாத்திரீகர்களும் இலங்கை திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

இந்தியாவில் சிக்கியிருந்த அனைத்து பௌத்த யாத்திரீகர்களும் இலங்கை திரும்பினர்

(நா.தனுஜா) 

இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து இலங்கை பௌத்த யாத்திரிகர்களும் தற்போது இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். 

உள்ளக வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக தனது விமான நிலையங்களை இந்திய அரசு மூடுவதற்கு முன்னர், பிரத்தியேகமான கடைசி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மொத்தமாக 48 பௌத்த யாத்திரீகர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 05.10 மணிக்கு புதுடில்லியிலிருந்து புறப்பட்ட நிலையில், இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து இலங்கை பௌத்த யாத்திரீகர்களும் தற்போது இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். 

முன்னராக இன்றைய தினம் சென்னையிலிருந்து 03.00 மணிக்கு புறப்பட்ட மற்றுமொரு பிரத்தியேக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 97 பௌத்த யாத்திரீகர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்ததுடன், மொத்தமாக 145 யாத்திரீகர்கள் மார்ச் 22 ஆம் திகதி இலங்கைக்கு நாடு திரும்பினர். 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யு.எல். 196 மூலமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 21ஆம் திகதி 19.31 மணிக்கு மொத்தமாக 298 யாத்திரீகர்கள் புதுடில்லியிலிருந்து புறப்பட்டனர். 

உள்நாட்டு வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக இலங்கை விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த நேரத்தில், இந்தியாவில் சுமார் 1500 இலங்கை பௌத்த யாத்திரீகர்கள் இருந்தனர். 

அப்போதிலிருந்து, முன்னர் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக விமானங்கள் மூலமாகவும், பின்னர் சிக்கித் தவித்த யாத்திரீகர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்காக செயற்படுத்தப்பட்ட பிரத்தியேக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் மூலமாகவும் இந்த யாத்திரீகர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறினர். 

மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில், புதுடில்லியிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் ஆகியன வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் பௌத்த சாசன அமைச்சு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து, யாத்திரீகர்கள் நாட்டிற்கு திரும்பி வருவதற்கான வசதிகளை வழங்குவதற்காக புதுடில்லி மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகங்களுடனும் மற்றும் சுற்றுப்பயணக் குழுக்களுடனும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டன. 

யாத்திரீகர்களின் டிக்கெட்டுக்களை மறுசீரமைத்தல் மற்றும் டில்லி மற்றும் சென்னையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் வழங்கப்படும் உதவிகள் ஆகியன இந்த முயற்சிகளில் உள்ளடங்குகின்றன.

No comments:

Post a Comment