(இராஜதுரை ஹஷான்)
ஊரடங்கு சட்டம் நிறைவு பெற்றவுடன் கொழும்பில் இருந்து சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்பிற்கு வருவதற்கு எவ்வித விசேட போக்குவரத்து நடடிக்கைளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. நிலைமையினை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே புகையிரத சேவைகளை நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்டது என புகையிரத சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடரங்கு சட்டம் பிறப்பித்தவுடன் பொதுமக்கள் தலைநகரில் (கொழும்பு) இருந்து தங்களின் சொந்த இடங்களுக்கு பல நெருக்கடிகளுக்கு மத்தியில் புகையிரதத்தில் சென்றுள்ளார்கள்.
ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்து அதனை அமுல்படுத்துவதற்கு ஒதுக்கிய நேரத்தில் எவ்வித மேலதிக புகையிரத சேவைகளையும் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போனது.
ஊரடங்கு சட்டம் அறிவித்தவுடன் மேலதிகமாக போக்குவரத்து சேவைகளை ஏற்படுத்துமாறு அரசாங்கம் எவ்வித ஆலோசனைகளையும் வழங்கவில்லை. முடியுமான அளவிலேயே போக்குவரத்து சேவைகளை வழங்கி நிலைமையினை குறைந்த பட்சமேலனும் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணியுடன் ஊரடங்கு சட்டம் நிறைவு பெற்றவுடன் மீண்டும் சொந்த இடங்களில் இருந்து கொழும்புக்கு திரும்பி வருதற்கு எவ்வித போக்குவரத்து மேலதிக சேவைகளும் முன்னெடுக்க இதுவரையில் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லையென அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment