முகக் கவசம் அணிவோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சமுதாய மருத்துவ நிபுணருமான வைத்திய கலாநிதி இ.கேசவன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது கொரோனா நோய் பரவி வருவதால் பொதுமக்கள் முகக் கவசத்தை வாங்குவதற்கு தேடித் திரிவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவருடன் நேரடியாக 3 அடிக்குட்பட்ட தூரத்தில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளுபவர்கள் முகக் கவசம் அணிவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளி இருமும்போது, தும்மும்போது இந்நோய்க் கிருமிகள் வெளியேறுவதால் கொரோனா நோயாளி முகக் கவசம் அணிவது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக கொரோனா நோயாளியை அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவரை பராமரிக்கும் வைத்தியர், தாதிமார் மற்றும் சுகாதார சேவை சம்பந்தப்பட்டவர்கள் முகக் கவசம் அணிதல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் உமிழ் நீர் துகள்கள் மூலமாக கொரோனா பரவும். உமிழ் நீர் துகள்கள் பெரும்பாலும் நீண்டதூரம் பயணிக்காது. எனவே நோயாளியிடமிருந்து 4 அடிக்கு அப்பால் இருப்பவர்கள் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் கிடையாது. முகக் கவசம் அணி வோரும், அணியத் தேவை இல்லாதோரும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவுதல் அத்தியாவசியமாகும்.
No comments:
Post a Comment