ஒரு வருடத்துக்கு முன் புதைக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் மீண்டும் தோண்டி எடுப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

ஒரு வருடத்துக்கு முன் புதைக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் மீண்டும் தோண்டி எடுப்பு

மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் பகுதியில் ஒரு வருடத்துக்கு முன் உயிரிழந்த 8 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சத்துருக் கொண்டான் கும்பிளன் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார் என குறித்த நபரின் மகன் ஒருவரின் குற்றச்சாட்டுக்கமைய குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது. 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய அண்ணாமலை இராமகிருஷ்ணன் என்பவர் கடந்த வருடம் மார்ச் 19 ஆம் திகதி (19-03-2019) சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து இவரது சடலம் கும்பிளான் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் கொலை செய்யப்பட்டார் என கடிதம் ஒன்று பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்ததையடுத்து மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக புலனாய்வு தகவலுக்கமைய உயிரிழந்தவரின் கடைசி மகனை விசாரணை செய்தனர். 
இதன்போது குறித்த மகன் தனது தந்தையார் உயிரிழந்த போது சகோதரன் வீட்டில் இருந்ததாகவும் சகோதரன் தலையனையை முகத்தில் வைத்து அழுத்தி தனது தந்தையை கொன்றதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து புதைக்கப்பட்ட குறித்த சடலத்தை மீண்டும் தோண்டி பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார். 

இதன் பிரகாரம் குறித்த சடலத்தை நேற்று புதன்கிழமை (11) மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் அரச பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி

No comments:

Post a Comment