அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனாவா? - பரிசோதனை முடிவை வெளியிட்ட மருத்துவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனாவா? - பரிசோதனை முடிவை வெளியிட்ட மருத்துவர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என இன்று பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையின் முடிவை அவரது மருத்துவர் இன்று வெளியிட்டுள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டு ஜனாதிபதியின் தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினும் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது பிரேசில் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியுடன் பஃபியோ வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரேசில் ஜனாதிபதியுடன் நாடு திரும்பிய தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும், புகைப்படமும் எடுத்துக் கொண்ட அமெரிக்க டொனால்டு டிரம்பிற்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. 

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்வேன் என்றார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 

இந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர் ''அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை’’ எனவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கள் நாட்டு அதிகாரிகளில் மேலும் சிலருக்கு கொரோனா பரவி உள்ளதாக பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment