அரசியல் மற்றும் சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிலரால், பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலைக்கு வருவோர் உடலில் வலியிருப்பதாகவும் இன்னும் பல காரணங்களையும் கூறி சிகிச்கை பெற விரும்புவது, எதிர்த்தரப்பினர் கைது செய்யப்படுவதைத் தூண்டுவதற்கே எனத் தெரியவந்துள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது அண்மைக்காலமாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நபர்கள், தாம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நோயாளர் விடுதிகளில் தங்குகின்றனர்.
எதிர்த்தரப்பிகனர் சிலரைப் பழிவாங்கும் அல்லது கைதாகும் சூழலைத் தோற்றுவிக்கவே இவர்கள் இவ்வாறு செய்கின்றனர். மருத்துவ ரீதியாக சோதனைக்குட்படுத்தினால், எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்பது நிரூபணமாகிறது.
கிளிநொச்சி நிருபர்
No comments:
Post a Comment