எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.எஸ்.ரி.எப் (ESDF) நிறுவனத்தால் உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஈ.எஸ்.ரி.எப் (ESDF) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எச்.எம்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஷா, சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.றுசைத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 குடும்பங்களுக்கும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 குடும்பங்களுக்குமாக ஐம்பது குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment