சீனாவில் தோன்றி, உலக நாடுகளில் மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பிரேசிலில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கத்துக்காக சிகிச்சை பெற்றுவந்த 62 வயது முதியவர் பலியானதாக அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு பிரேசிலில் முதல் நபர் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment