பென்டகனிற்குள் நுழைந்தது கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

பென்டகனிற்குள் நுழைந்தது கொரோனா

பென்டகனில் பணியில் ஈடுபட்டிருந்த மரைன் படைப்பிரிவை சேர்ந்த ஒருவரிற்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது என அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த மரைன் படைப்பிரிவின் வீரர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார். மரைன் வீரரின் மனைவியும் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து இருவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதும் அவர் அவரிற்கான மருத்துவ நிலையத்தை தொடர்புகொண்டார் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். 

அவர் பணிபுரிந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது, ஏனைய படைவீரர்களின் உடல்நலத்தை பேணுவதற்காக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பென்டகனிற்கு சென்ற மேலும் இருவர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad