தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கும் அமெரிக்க மருத்துவமனைகள் - உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கும் அமெரிக்க மருத்துவமனைகள் - உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்

கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம், பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் நியுயோர்க்கின் பெல்வ்யூ மருத்துவமனை தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கியுள்ளது. 

மருத்துவமனைக்கு முன்பாக தற்காலிக கூடாரங்கள், குளிரூட்டப்பட்ட டிரெய்லர்கள் ஆகியவற்றை காண்பிக்கும் படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நியுயோர்க்கின் ஏனைய மருத்துவமனைகளிலும், நகரம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளிலும் தற்காலிக பிரேத அறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றவேளை பெல்வ்யூ மருத்துவமனையில் தற்காலிக பிரேத அறைகள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சாதாரண நாட்களில் நகரத்தின் பிரேத அறைகளால் 900 உடல்களை கையாள முடியும் நகரத்தின் மருத்துவ பரிசோதகரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இதுவரை நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை ஆனால் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கூடாரங்கள் மற்றும் டிரக் வாகனங்களால் 3500 உடல்களை கையாள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்று நோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad