நாளாந்த சம்பளத்தை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளிகள் குறித்து சிந்தியுங்கள், நாங்கள் மிருகங்கள் போல வாழ்கின்றோம் - சொயிப் அக்தர் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

நாளாந்த சம்பளத்தை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளிகள் குறித்து சிந்தியுங்கள், நாங்கள் மிருகங்கள் போல வாழ்கின்றோம் - சொயிப் அக்தர்

கொரோனா வைரஸ் உலகை உலுக்கிக் கொண்டுள்ள இந்த தருணத்தில மக்கள் மத பொருளாதார வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என பாக்கிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களிற்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் என தெரிவித்துள்ள அக்தர் கொரோனா வைரஸ் என்பது சர்வதே நெருக்கடி நாங்கள் சர்வதேச சக்திகள் போல சிந்திக்க வேண்டும மத வேறுபாடுகளிற்கு அப்பால் எழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

முடக்கப்படுதல் என்பது வைரஸ் பாதிக்காமலிருப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் நீங்கள் சந்திப்புகளில் தொடர்பாடல்களில் ஈடுபட்டால் அது உதவிகரமானதாக அமையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

நீங்கள் பொருட்களை பதுக்குபவர் என்றால் நாளாந்த கூழித் தொழிலாளி குறித்து சிந்தியுங்கள், கடைகள் காலியாகியுள்ளன, நீங்கள் மூன்று மாதம் உயிர் வாழ்வீர்கள் என்பதற்கான உத்தரவாதம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாளாந்தம் சம்பளத்தை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளி குறித்து சிந்தியுங்கள் அவர்கள் எப்படி குடும்பத்தை பார்ப்பார்கள், தங்கள் குடும்பங்களிற்கு உணவு வழங்குவார்கள் எனவும் சொயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களை பற்றி சிந்தியுங்கள், இது மனிதனாகயிருப்பதற்கான தருணம் இந்து, முஸ்லீமாக இருப்பதற்கான தருணமில்லை, மக்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், நிதி சேகரிக்க வேண்டும், பொருட்களை பதுக்க வேண்டாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பணக்காரர்கள் எப்படியும் தப்புவார்கள், ஏழைகள் என்ன செய்வார்கள் நாங்கள் மிருகங்கள் போல வாழ்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment