அமைச்சர் டக்ளஸ் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு திடீர் விஜயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

அமைச்சர் டக்ளஸ் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு திடீர் விஜயம்

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை (15) காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் இடம்பெறும் கடலரிப்பு தொடர்பாக நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் வை.எல் சுலைமாலெப்பை யின் கோரிக்கைக்கு அமைய சென்று பார்வையிட்டார்.

மேலும் நிந்தவூர் மீனவர்களின் தேவைக்கென ஏற்கனவே அமைக்கப்பட்டு இயங்கா நிலையில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன் அதனை உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad